1. நூலகம் அமைத்து வாசிக்கும் வழக்கத்தையும், எழுதும் பழக்கத்தையும் மக்களிடையே ஊக்குவித்தல்
2. கட்டுரைப் போட்டிகள் நடத்தி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எழுத்தாற்றலை வெளிக் கொண்டு வருதல்
3. பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்களோடு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள், விருதுகள் வழங்கி ஊக்குவித்தல்
4. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தல்
5. மாணவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்தி, பரிசளித்து ஊக்குவித்தல்
6. ஏழை, எளிய மக்களுக்கு பண்டிகைகளின் போது உணவு, உடைக்கான உதவிகளைச் செய்தல்
7. துண்டுப் பிரசுரங்கள், கையேடுகள் மூலமாக பல்வேறு விழிப்புணர்வுச் செய்திகளை மக்களிடத்தில் கொண்டு செல்லுதல்
8. அன்னை ராபியா பதிப்பகம் மூலமாக மக்களுக்கு பயனுள்ள நூல்களை வெளியிடுதல்
9. மக்களுக்கு பயனுள்ள தலைப்புகளில் கருத்தரங்கங்கள், பொதுக் கூட்டங்கள், விழிப்புணர்வு முகாம்கள் நடத்துதல்
10. மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதலையும், வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயில்வதற்கான வழிகாட்டுதல்களையும் அளித்தல்
11. ஆன்மீக கருத்தரங்கங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்துதல்
12. நலிந்த நிலையில் உள்ள ஏழைகளுக்கு தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்தல்
13. மருத்துவ முகாம்கள் நடத்தி உடல்நலம் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துதல்
14. பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகளை மக்களிடத்திலும், வளரும் குழந்தைகளிடத்திலும் விளக்கி பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கான முயற்சிகளைச் செய்தல்
15. மரம் நடுதல் மூலமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான முயற்சிகளை எடுத்தல்
16. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை அறியத் தருதல்