அன்னை ராபியா அறக்கட்டளை

அன்னை ராபியா அறக்கட்டளை

புளியங்குடி மக்களின் சமூக, கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கான பணிகளில் ஈடுபட வேண்டும், அறிவார்ந்த இளைய சமுதாயத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், வளரும் தலைமுறையினருக்கு வாசிக்கும் பழக்கத்தைக் கற்றுத் தந்து வரலாறு அறிந்தவர்களாக வார்த்தெடுக்க வேண்டும், நலிந்த நிலையில் உள்ளவர்கள் சுயதொழில்கள் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும், மாணவர்கள் கல்வி உதவித் தொகைகளைப் பெறவும்,  வெளிநாடுகளில் மேற்படிப்பைத் தொடர்வதற்குமான வழிகாட்டுதலையும் வழங்க வேண்டும், ஆதரவற்றவர்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்கச் செய்ய வேண்டும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்,  மக்களுக்கு பயனுள்ள தலைப்புகளில் கருத்தரங்குகள், பொதுக் கூட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும்,  அன்னை ராபியா பதிப்பகம் மூலமாக பயனுள்ள நூல்களை வெளியிட வேண்டும் என்பன போன்ற நோக்கங்களை இலக்காகக் கொண்டு அன்னை ராபியா அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

சட்ட விதிகளின்படி பதிவு செய்யப்பட்ட அன்னை ராபியா அறக்கட்டளை திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியில் 2016ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மக்களின் சமூக, கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கான பணிகளிலும், அறிவார்ந்த இளைய சமுதாயத்தை உருவாக்குவதிலும்  தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. 

அன்னை ராபியா அறக்கட்டளை

அன்னை ராபியா  அறக்கட்டளை

ஹிக்மத் அகாடமி

ஹிக்மத் அகாடமி

பார்வையாளர்கள்