அன்னை ராபியா அறக்கட்டளை

அன்னை ராபியா நினைவு மாநில அளவிலான சிறுகதைப் போட்டி 2015-2016

அன்னை ராபியா நினைவு மாநில அளவிலான சிறுகதைப் போட்டி 2015-2016 பரிசளிப்பு நிகழ்ச்சி

அன்னை ராபியா நினைவு கட்டுரைப் போட்டி - 2016

அன்னை ராபியா நினைவு கட்டுரைப் போட்டி - 2016 பரிசளிப்பு விழா விருது வழங்கும் விழா மற்றும் வாசிப்பு கருத்தரங்கம்

திருநபி மொழியும் இறையருள் வழியும்

அன்னை ராபியா பதிப்பகத்தின் சார்பாக வெளியிடப்பட்ட திருநபி மொழியும் இறையருள் வழியும் என்ற நூல்

அன்னை ராபியா அறக்கட்டளை நடத்திய கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்

அன்னை ராபியா அறக்கட்டளை தொடக்கவிழா மற்றும் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்

Sunday, May 4, 2025

ஹிக்மத் அகாடமி நடத்திய கல்வி கருத்தரங்கம்

அன்னை ராபியா அறக்கட்டளையின் ஓர் அங்கமான ஹிக்மத் அகாடமி மூலம் மாணவ/மாணவியர்களுக்கான கல்வி கருத்தரங்கம் 04-05-2025 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10 மணியளவில் அகாடமி  வளாகத்தில் வைத்து நடத்தப்பட்டது

மாணவி H. அஃப்ரின் இறைவசனங்களை ஓத விழா இனிதே துவங்கியது. ஹிம்கத் அகாடமியின் நிர்வாக இயக்குநர் ஹாஜி. A. அபுதாஹீர் வரவேற்புரை ஆற்றினார். 

 சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட நமது மண்ணின் மைந்தர் முனைவர். அப்துல் காதிர் M.Sc., M.Phil., PGDCA., Ph.D., அவர்கள் அற்புதமனதொரு உரையை வழங்கினார்.

ஹிக்மத் அகாடமியின் வளர்ச்சியிலும், நம் ஊர் மாணவ/மாணவியர்களின் முன்னேற்றத்திலும பெரிதும் அக்கறை கொண்ட ஹாஜி. M. செய்யது சுல்தான இப்ராஹிம் B.Com., மாணவ/மாணவியரை வாழ்த்தியும், ஊக்கப்படுத்தியும் பேசினார்.
இக்கல்வி கருத்தரங்கின் முதன்மை கருப்பொருள் ஆங்கிலத்தைப் பற்றியது என்பதால், சிறப்பு அழைப்பாளர்,அகாடமி நிர்வாகரிகள் மற்றும் மாணவிகள் உள்ளிட்டோர் ஆங்கிலத்திலும் பேசியது நிச்சயம் கலந்து கொண் மாணவ/மாணவியர்களுக்கு பெரும் ஊக்கத்தைத் தந்திருக்கும்...
இந்நிகழ்ச்சியில் மேற்படிப்பு குறித்த மாணவர்களின் கேள்விக்கு உரிய விளக்கமும், வழிகாட்டுதலும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஹிக்மத் அகாடமி நிர்வாகிகள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

ஹிக்மத் அகாடமியின் செயல்திட்ட இயக்குநர் ஜனாப். A. செய்யது M.Com.,  நன்றியுரை ஆற்றினார். 

இக்கருத்தரங்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனவும், ஆங்கில மொழியின் அவசியம் குறித்த புரிதலையும்,  ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும்  எப்படிப் பழக வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதலையும் சிறப்பான முறையில் வழங்கியதாக  மாணவ/மாணவியர்  கருத்து தெரிவித்தனர். 

                                   நிகழ்ச்சியின்  அழைப்பிதழ் & புகைப்படங்கள்









Share:

Sunday, January 19, 2025

ஹிக்மத் அகாடமி நடத்திய ஆளுமை மேம்பாட்டு நிகழ்ச்சி

பொதுத்தேர்வுகளை எழுத இருக்கும் பள்ளி மாணவர்கள் தேர்வுகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டியும், மாணவர்களின் ஆளுமைப் பண்புகளை மேம்படுத்தவும் ஹிக்மத் அகாடமியின் சார்பாக ஆளுமை மேம்பாட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
18-01-2025 அன்று மாலை 5.30 மணி அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வினை மஸ்ஜிதுல் அஃலம் பள்ளி இமாம் அபுபக்கர் ஹசனி இறைவசனங்களை ஓதி தொடங்கி வைத்தார். ஹிக்மத் அகாடமியின் நிர்வாக இயக்குநர் அபுதாஹீர் வரவேற்புரையாற்றி வருகைபுரிந்த சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். அகாடமியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செய்யது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
ஹிக்மத் அகாடமியின் கௌரவ ஆலோசகர் ஹாஜி. சுல்தான் செய்யது இப்ராஹீம், இன்ஜினியர் முகைதீன் அப்துல் காதர் (மக்கா மைதீன்), சமூக ஆர்வலர் லெப்பை முஸ்தபா, மேலத்தெரு நண்பர்கள் குழுவைச் சார்ந்த ஒலியுல்லாஹ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்திப் பேசினர்.
இந்நிகழ்ச்சியில் ஆளுமை மேம்பாட்டு நிபுணர் அப்துல் அஜீஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களிடத்தில் உரையாற்றினார். வாழ்வில் முன்னேறுவதற்கான இலக்கை நிர்ணயித்தல் குறித்தும், அதனை அடைவதற்கான வழிமுறைகள் குறித்தும் சிறப்பான முறையில் விளக்கினார்.
ஹிக்மத் அகாடமியில் பயின்று வரும் மாணவ/மாணவியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். ஹிக்மத் அகாடமி ஏற்பாடு செய்த ஆளுமை மேம்பாட்டு நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்னை ராபியா அறக்கட்டளையின் அறங்காவர் மைதீன் பாதுஷா, ஹிக்மத் அகாடமியின் நூலக ஒருங்கிணைப்பாளர் முஹம்மது முஸ்தபா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


நிகழ்ச்சியின் அழைப்பிதழ் & புகைப்படங்கள்












Share:

TNPSC Group II A தேர்வு விழிப்புணர்வு முகாம்

 பார்ட் அறக்கட்டளை மற்றும் அன்னை ராபியா அறக்கட்டளை இணைந்து நடத்திய TNPSC Group II A தேர்வு விழிப்புணர்வு முகாம் பார்ட் அரங்கில் 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி அளவில்  நடைபெற்றது. புளியங்குடி மேலப்பள்ளிவாசல் இமாம் ஹாஜி கலிலூர் ரஹ்மான் பைஜி இறைவசனங்களை ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பார்ட் அறக்கட்டளையின் தலைவர் அமீர் கான் தலைமை தாங்கினார். பார்ட் அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர் ஜாகிர் அப்பாஸ் வரவேற்புரை வழங்கினார்.

சிறகு போட்டித் தேர்வு நடுவத்தின் நிறுவனர் மற்றும் தாளாளர் மற்றும் முன்னாள் துணை ஆட்சியர் தக்கலை ஹலீமா, வடகரை கிராம நிர்வாக அதிகாரி ஷாஜகான், குன்னக்குடி கிராம நிர்வாக அதிகாரி முத்துக் குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு அரசுப் பணிகள் குறித்தும், அதன் தேவைகள் குறித்தும் விரிவாகப் பேசினர். அன்னை ராபியா அறக்கட்டளையின் அறங்காவலர் அபுதாஹீர் சிறப்புரையாற்றினர். பார்ட் அறக்கட்டளையின் செயலாளர் ஷேக் காதர் மைதீன் நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

 

புளியங்குடி சுற்று,வட்டார மாணவ/மாணவியர் மற்றும் அவர்தம் பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டு பயன்அடைந்தனர். இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவசியம் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.


நிகழ்ச்சியின் அழைப்பிதழ்


நிகழ்ச்சியின் புகைப்படங்கள்



















Share:

Tuesday, August 20, 2019

அன்னை ராபியா நினைவு விருதுகள் - 2019

அன்னை ராபியா நினைவு சமூக சேவகர் விருது
கிணறு, ஆறு, குளம் உள்ளிட்ட நீர் ஆதாரங்களை பாதுகாக்கத் தவறியதன் விளைவு புளியங்குடியில்கூட தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டது.

நாளுக்கு நாள் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வரும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு களத்தில் இறங்கிய குழுவினர்தான் புளியங்குடி 'கிணறுகள் பாதுகாப்புக் குழுவினர்'.

ஒரு காலத்தில் மக்களின் நீர் ஆதாரமாக விளங்கிய ஜின்னா நகர் 5ஆவது தெரு கிணறு, 3ஆவது தெரு கிணறு, கே.டி.எம். தெரு கிணறு உள்ளிட்ட கிணறுகள் பல வருடங்களாக குப்பைகள் கொட்டும் இடமாக மாறியிருந்தது. அக்கிணறுகளை பெரும் முயற்சி எடுத்து, தூர் வாரி மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த அரும் பணியை செய்து வருகின்றனர் கிணறுகள் பாதுகாப்புக் குழுவினர்.

எந்தவொரு சமூகப் பணிக்கும் அதற்கான அங்கீகாரமும், ஊக்கமும் மிக முக்கியமானது. அதுவே அவர்களை தொடர்ந்து இயங்கச் செய்யும். அதன்படி, கிணறுகள் பாதுகாப்புக் குழுவினரான சிக்கந்தர், ஜாபர் அலி, முஸாபர் அஹமது ஆகியோருக்கு அன்னை ராபியா அறக்கட்டளை சார்பாக அன்னை ராபியா நினைவு சமூக சேவகர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அன்னை ராபியா நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது
புளியங்குடியின் அடையாளமாகத் திகழும் உயர்திரு கோமதி நாயகம் அவர்களுக்கு அன்னை ராபியா அறக்கட்டளையின் சார்பாக 2019 ஆம் ஆண்டுக்கான அன்னை ராபியா நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மதிப்பிற்குரிய புளியங்குடி கோமதி நாயகம் அவர்கள் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். மகாத்மா காந்தி வகுத்தளித்த ஆதாரக்கல்விப் பயிற்சி ஆசிரியராக இருந்ததால் காந்திஜியின் நிர்மாணத்திட்டங்களில் ஆர்வம் நிரம்பியவர். 40 ஆண்டுகளுக்கு முன்பு புளியங்குடியில் விவசாய சேவா சங்கத்தை நிறுவினார். இச்சங்கம் புளியங்குடி சுற்று வட்டாரப் பகுதியில் விவசாய மறுமலர்ச்சிக்கு பேருதவி புரிந்தது.

சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் இயற்கை விவசாயத் தொழில் நுட்ப வல்லுனர்கள், வனத்துறை, தோட்டக்கலைத்துறை, நறுமணப்பொருள் வாரியம் சார்ந்த வல்லுநர்களை வரவழைத்து உரையாற்ற வைத்து விவசாயிகளுக்கு பல்லுயிர்ப் பெருக்கம், நீர்வள நிர்வாகம், சிக்கன வீடு கட்டுதல், இயற்கை விவசாயம், மூலிகை மருத்துவம், மரம் நடுதல், சாண எரிவாயுத் தொழில்நுட்பம் உள்ளிட்ட நுட்பங்கள் கற்றுத்தரப்பட்டது.

ஆயிரக்கணக்கான மரங்களை நட்டுள்ளார். வீதியெல்லாம் சோலை, ஒற்றை ரூபாய்த் திட்டம், இல்லம் தோறும் இயற்கை உணவுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை வகுத்தளித்துள்ளார். இவரிடம் பயிற்சி பெற்ற இரு விவசாயிகள் ஜனாதிபதியிடம் விருது வாங்கியுள்ளனர். விவசாயம் பற்றிய எண்ணற்ற கட்டுரைகளை பல இதழ்களில் எழுதியுள்ளார். சமீபத்தில் நியூஸ் 18 தொலைக்காட்சி இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது. கோமதி நாயகம் ஐயாவின் பேருக்கும், புகழுக்கும் பணிக்கும் எங்களின் கௌரவிப்பு மிகச் சிறியதுதான். ஆயினும் சமகாலத்தில் நம்மோடு வாழும் ஆளுமையை அவர் வாழும் காலத்திலேயே கௌரவித்த திருப்தியை அன்னை ராபியா அறக்கட்டளை பெறுகிறது.

குறிப்பு:
திடீர் உடல் நலக்குறைவால் அவரால் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. அவரது சார்பாக அவரது உற்ற நண்பர் வேலு முதலியார் அவர்களின் பேரர் விருதைப் பெற்றுக் கொண்டார். பின்னர் கோமதி நாயகம் அவர்களின் இல்லத்திற்குச் சென்று அவர்களிடம் விருதை அளித்து மகிழ்ந்தோம்.

விழாவுக்கான  துண்டுப் பிரசுரம்:





விழா புகைப்படங்கள்:
























Share:

அன்னை ராபியா அறக்கட்டளை

அன்னை ராபியா  அறக்கட்டளை

ஹிக்மத் அகாடமி

ஹிக்மத் அகாடமி

அன்னை ராபியா பதிப்பகம்

அன்னை ராபியா பதிப்பகம்

பார்வையாளர்கள்