அன்னை ராபியா அறக்கட்டளை

Friday, September 23, 2016

அன்னை ராபியா நினைவு மாநில அளவிலான சிறுகதைப் போட்டி 2015-2016

கல்லூரி மாணவ, மாணவியர் மத்தியில் வரதட்சிணைக்கெதிரான விழிப்புணர்வையும், இலக்கியம் குறித்த அறிமுகத்தையும் ஏற்படுத்தும் விதமாக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் இயங்கி வரும் கைக்கூலி கைவிட்டோர் கழகத்துடன் இணைந்து 'அன்னை ராபியா நினைவு மாநில அளவிலான சிறுகதைப் போட்டி 2015-2016' நடத்தப்பட்டது

இச்சிறுகதைப் போட்டியில் தமிழகத்தில் உள்ள கலைக் கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவிகளும், மாணவர்களும் பெரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தங்களது சிறுகதைகளைச் சமர்ப்பித்தனர். ஜமால் முஹம்மது கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் போட்டிக்கு வந்த சிறுகதைகளைப் பரிசீலித்து பரிசிற்குரிய சிறுகதைகளைத் தேர்வு செய்தனர்

18-3-2016 அன்று காஜாமியான் விடுதி கலையரங்கில் நடைபெற்ற பிரதிபலிப்பு இதழ் வெளியீட்டு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுத் தொகையும், நினைவுப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இச்சிறுகதைப் போட்டிக்குரிய  பரிசுத் தொகைகள், நினைவுப் பரிசுகள் மற்றும் போட்டியை நடத்துவதற்கான செலவுகள் உள்ளிட்ட அனைத்தையும் அன்னை ராபியா அறக்கட்டளை ஏற்றுக் கொண்டது.

அன்னை ராபியா நினைவுச் சிறுகதைப் போட்டி மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனவும், எழுதுவதிலும், இலக்கியங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்ற உத்வேகத்தையும், திருமணத்தின் போது வரதட்சிணையை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியத்தையும் அளித்ததாக போட்டியில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

அன்னை ராபியா நினைவு மாநில அளவிலான சிறுகதைப் போட்டி 2015-2016 வெற்றியாளர்கள்:

முதல் பரிசு: (ரூ. 5000/- + நினைவுப் பரிசுசான்றிதழ்)
நூ. பௌசுல் பரினா பேகம்,
இளங்கலை மூன்றாமாண்டு - ஆங்கிலம்,
ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி .

இரண்டாம் பரிசு: (ரூ. 3000/- + நினைவுப் பரிசுசான்றிதழ்)
. ஐஸ்வர்யா,
இளங்கலை இரண்டாமாண்டு - கணிதம்,
சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி, திருச்சி.

மூன்றாம் பரிசு: (ரூ. 2000/- + நினைவுப் பரிசுசான்றிதழ்)
இராமாலினி,
இளங்கலை இரண்டாமாண்டு - ஆங்கிலம்,
அரசு மகளிர் கல்லூரி, கும்பகோணம்.

ஆறுதல் பரிசுகள்: (நினைவுப் பரிசு  + சான்றிதழ்)
1.      பா. கிருஷ்ணப்ரியா,
இளங்கலை மூன்றாமாண்டுகணிதம்,
ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி, திருநெல்வேலி.

2.      கா. சுகன்யா,
முதுகலை இரண்டாமாண்டுதமிழ்
காவேரி மகளிர் கல்லூரி,
அண்ணாமலை நகர், திருச்சி.

3.      சே. சுபைதத் சரீன்,
இளங்கலை இரண்டாமாண்டுதகவல் தொழில் நுட்பம்
இராபியம்மாள் அகமது மைதீன் மகளிர் கல்லூரி,
வாசன் நகர், திருவாரூர்.

 வெற்றியாளர்கள் பரிசு பெற்ற போது எடுத்த புகைப்படங்கள்






போட்டிக்கான துண்டுப் பிரசுரம்





Share:

0 comments:

Post a Comment

அன்னை ராபியா அறக்கட்டளை

அன்னை ராபியா  அறக்கட்டளை

ஹிக்மத் அகாடமி

ஹிக்மத் அகாடமி

பார்வையாளர்கள்