அன்னை ராபியா அறக்கட்டளை

Friday, September 23, 2016

அன்னை ராபியா வாழ்நாள் சாதனையாளர் விருது - 2016

சுமார் 37 ஆண்டுகாலம் தலைமையாசிரியராகக் கல்விப் பணியாற்றி, இஸ்லாமிய சித்தாந்தம் அல்லாஹ் அருளிய அழகிய துஆக்கள் ஆகிய நூல்களை எழுதி, பல்வேறு இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து, தமிழக அளவில் இலக்கியத்திலும் சீறாப்புராண விரிவுரையிலும் அரும்பணி ஆற்றிய புளியங்குடி புலவர் ஹாஜி. மு. கமால் முகைதீன் அவர்களின் பணிகளை அங்கீகரித்து அவரை கௌரவிக்கும் விதமாக அன்னை ராபியா வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வுக் குழுவினரால் செய்யப்பட்டார்.

அதன்படி, புலவர் ஹாஜி. மு. கமால் முகைதீன் அவர்களுக்கு 'அன்னை ராபியா வாழ்நாள் சாதனையாளர் விருது-2016' 17-07-2016 அன்று நடைபெற்ற வாசிப்பு கருத்தரங்கு விழாவில் வழங்கப்பட்டது. இலக்கிய ஆளுமையான அவரை புளியங்குடி மக்கள் சார்பாக கௌரவிக்காமல் விட்ட குறை அன்னை ராபியா அறக்கட்டளையின் மூலம் நீங்கியது.

புலவர் ஹாஜி. மு. கமால் முகைதீன் விருது பெற்ற போது


Share:

1 comment:

அன்னை ராபியா அறக்கட்டளை

அன்னை ராபியா  அறக்கட்டளை

ஹிக்மத் அகாடமி

ஹிக்மத் அகாடமி

பார்வையாளர்கள்