அன்னை ராபியா அறக்கட்டளை

Friday, September 23, 2016

அன்னை ராபியா நினைவு கட்டுரைப் போட்டி-2016

மாணவ, மாணவிகளின் கோடை விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையிலும் வாசிக்கும் பழக்கத்திலும் எழுதும் கலையிலும் மிகவும் பின்தங்கி இருக்கும் புளியங்குடி மக்களிடத்தில் வாசிக்கும் பழக்கத்தையும், எழுதும் கலையையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையிலும்அன்னை ராபியா அறக்கட்டளையின் சார்பாக 'அன்னை ராபியா நினைவு கட்டுரைப் போட்டி-2016' என்ற பெயரில் கட்டுரைப் போட்டியொன்று நடத்தப்பட்டது.

புளியங்குடியில் முதன் முதலாக நடத்தப்பட்ட இக்கட்டுரைப் போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தங்களது ஆக்கங்களைச் சமர்ப்பித்தனர். போட்டிக்கு வந்த கட்டுரைகளை கடையநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் சேயன் இப்ராஹீம் பரிசீலித்து பரிசிற்குரிய கட்டுரைகளைத் தேர்வு செய்தார்.

வெற்றியாளர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் 17-07-2016 அன்று புளியங்குடி ஹஜனத்துல் ஜாரியா அரபி பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. கட்டுரைப் போட்டிக்கான அறிவிப்பைப் பார்த்து தங்களது பிள்ளைகளை இப்போட்டியில் பங்கேற்கச் செய்த பெற்றோர்கள் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் போட்டியில் கலந்து கொண்ட அனைத்துப் போட்டியாளர்களின் பெற்றோருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் வாசிப்பு கருத்தரங்கமும் நடத்தப்பட்டது. கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட ஹாஜி.புலவர் மு. கமால் முகைதீன் 'வாசிப்பை நேசிப்போம்' என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். எழுத்தளார் சேயன் இப்ராஹீம் 'ஓதுவீராக...' என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். எழுத்தாளர் ஜி. அத்தேஷ் 'முஸ்லிம் சமூகமும், வாசிப்புப் பழக்கமும்' என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.

இவ்வாசிப்பு கருத்தரங்கம் பயனுள்ளதாகவும் புதுமையாகவும் இருந்தது எனவும், புதிய அனுபவத்தைத் தந்தது எனவும் விழாவில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

அன்னை ராபியா கட்டுரைப் போட்டி - 2016 முடிவுகள்:
கட்டுரைப் போட்டி நடுவர்: 
எழுத்தாளர் சேயன் இப்ராஹீம்,கடையநல்லூர்

முதல் பரிசு: (ரூ. 1500/- + நினைவுப் பரிசு + சான்றிதழ்)
A. அப்துல் ரசாக்,S/o. அபுதாஹீர்

இரண்டாம் பரிசு: (ரூ. 1000/- + நினைவுப் பரிசு + சான்றிதழ்)
M. அப்துல் ரஹ்மான்,S/o. முஸாபர் அகமது

மூன்றாம் பரிசு: (ரூ. 750/- + நினைவுப் பரிசு + சான்றிதழ்)
H. சுமையாபானு, W/o.இதயதுல்லா மீரான் சாகிப்

மூன்று ஊக்கப் பரிசுகள்: (ரூ. 500/- + நினைவுப் பரிசு + சான்றிதழ்)
1.A. ஆயிஷா பானு,D/o. அப்துல் ரஹீம்
2.K. திவான் பீவி,D/o.காஜா முகைதீன்
3.M.ஷமீனா, D/o. முகம்மது ஷாலிக்

சிறப்புப்  பரிசுகள்: (ரூ. 250/- + நினைவுப் பரிசு +  சான்றிதழ்)
1.A. அஜ்மலாபாத்திமா,D/o. அப்பாஸ்
2.M. ஆமினா தஸ்லிமா, W/o. முகம்மதுகமர்தீன்
3.A. பாத்திமா,D/o. அப்துல் மஜீத்
4.K. இக்ஷானா,D/o. காஜா மைதீன்
5.M. மகுமுதாள்,D/o.முகம்மதுஅலி ஜின்னா
6.A. மைதீன் பாத்திமா,D/o. அயூப் கான்
7.S. ரிஸ்வானாபானு,D/o. செய்யதுஒலி
8.S. ஷப்னாஆமினா,D/o. செய்யதுஅப்துல் காதர்

போட்டி அறிவிப்பிற்கான துண்டுப் பிரசுரம்


பரிசளிப்பு விழா அழைப்பிதழ்

பரிசளிப்பு விழா புகைப்படங்களில் சில...








வாசிப்பு கருத்தரங்கில் உரையாற்றும் சிறப்பு அழைப்பாளர்கள்



சிறப்பு விருந்தினர்கள் கௌரவிப்பு









Share:

0 comments:

Post a Comment

அன்னை ராபியா அறக்கட்டளை

அன்னை ராபியா  அறக்கட்டளை

ஹிக்மத் அகாடமி

ஹிக்மத் அகாடமி

பார்வையாளர்கள்