அன்னை ராபியா அறக்கட்டளை

Friday, February 17, 2017

அடுத்தது என்ன? புத்தகம் வழங்கும் திட்டம் - 1

புளியங்குடி மாணவர்களிடத்தில் பன்னிரெண்டாம்  வகுப்பிற்குப் பிறகு  என்ன படிக்கலாம்? பெரிய கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு என்னென்ன நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டும்? என்பதனைப் பற்றிய விழிப்புணர்வு மிகக் குறைவு.

பட்டப்படிப்பை முடித்த பின்னர் பட்டமேற்படிப்புகளைப் படிப்பதற்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? திறமைக்கும், தகுதிக்கும் ஏற்ற வேலையில் அமர்வதற்கான நடைமுறைகள் என்னென்ன? என்பதனைப் பற்றிய விழிப்புணர்வும் மிக மிகக் குறைவு. இதுபோன்ற காரணங்களால் திறமையான மாணவர்களும்கூட தங்களது திறமைக்கேற்ற உயர் படிப்புகளையும், வேலை வாய்ப்புகளையும் தேர்ந்தெடுப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது.

இதனைக் கவனத்தில் கொண்ட அன்னை ராபியா அறக்கட்டளை புளியங்குடி பள்ளி மாணவர்களின் எதிர்கால நலனுக்காக வேண்டி What Next? (அடுத்தது என்ன?) என்னும் புத்தகத்தை முதற்கட்டமாக காயிதேமில்லத் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியது.

உதவிப் பேராசிரியர் முஹம்மது ரபிக் தொகுத்துள்ள இப்புத்தகத்தில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்குப் பிறகு என்ன படிக்கலாம்? எங்கெங்கு படிக்கலாம்? என்னென்ன நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டும்? பள்ளிப் படிப்பிற்குப் பிறகான வேலைவாய்ப்புகள் என்னென்ன? போன்ற விவரங்கள் நிறைந்துள்ளன. அன்னை ராபியா அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்ட இவ்வழிகாட்டிப் புத்தகம்  மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று மாணவர்களும், இதுபோன்ற கல்விப் பணிகள் பாராட்டுக்குரியது என்று பெற்றோர்களும் கருத்துத் தெரிவித்தனர்.

அடுத்தது என்ன? புத்தகம்

நிகழ்ச்சி புகைப்படங்கள்





Share:

1 comment:

அன்னை ராபியா அறக்கட்டளை

அன்னை ராபியா  அறக்கட்டளை

ஹிக்மத் அகாடமி

ஹிக்மத் அகாடமி

பார்வையாளர்கள்