அன்னை ராபியா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் அ. முஹமது ரஃபிக் அவர்களின் திருமணம் 13-05-2017அன்று நடைபெற்றது. இத்திருமணத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கு 'அறிஞர்களின் பார்வையில் அண்ணல் நபி (ஸல்)' என்ற நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிம் அல்லாத நூறு அறிஞர்கள் கூறிய கருத்துகளை அன்னை ராபியா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் அ. முஹமது ரஃபிக் (ராபியா குமாரன்) தொகுத்திருந்தார். இந்நூல் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதாலும், இந்நூலில் உள்ள கருத்துகள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் அன்னை ராபியா அறக்கட்டளையின் அங்கமான அன்னை ராபியா பதிப்பகம் இந்நூலை அச்சிட்டு மக்களுக்கு அன்பளிப்புச் செய்தது. இந்நூல் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், வேறு எங்கும் படித்திடாத கருத்துகள் இந்நூலில் நிறைந்து இருப்பதாகவும் மக்கள் கருத்து தெரிவித்தனர்.
அறிஞர்களின் பார்வையில் அண்ணல் நபி (ஸல்) நூல் அட்டைப் படம்
0 comments:
Post a Comment