கல்லூரி மாணவ, மாணவியர் மத்தியில் வரதட்சிணைக்கெதிரான விழிப்புணர்வையும், இலக்கியம் குறித்த அறிமுகத்தையும் ஏற்படுத்தும் விதமாக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் இயங்கி வரும் கைக்கூலி கைவிட்டோர் கழகத்துடன் இணைந்து சென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டும் 'அன்னை ராபியா நினைவு மாநில அளவிலான சிறுகதைப் போட்டி 2016-2017' நடத்தப்பட்டது.
இச்சிறுகதைப் போட்டியில் தமிழகத்தில் உள்ள கலைக் கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவிகளும், மாணவர்களும் பெரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தங்களது சிறுகதைகளைச் சமர்ப்பித்தனர். ஜமால் முஹம்மது கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர் வ. முகம்மது யூனுஸ் தலைமையிலான நடுவர் குழு போட்டிக்கு வந்த சிறுகதைகளைப் பரிசீலித்து பரிசிற்குரிய சிறுகதைகளைத் தேர்வு செய்தனர்.
21-03-2017 அன்று காஜாமியான் விடுதி கலையரங்கில் நடைபெற்ற பிரதிபலிப்பு இதழ் வெளியீட்டு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுத் தொகையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நாகை எம்.எல்.ஏ மதிப்பிற்குரிய சகோதரர் தமிமுன் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு பெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இச்சிறுகதைப் போட்டிக்குரிய பரிசுத் தொகைகள், மற்றும் போட்டியை நடத்துவதற்கான செலவுகள் உள்ளிட்ட அனைத்தையும் அன்னை ராபியா அறக்கட்டளை ஏற்றுக் கொண்டது.
அன்னை ராபியா நினைவு மாநில அளவிலான சிறுகதைப் போட்டி 2016-2017 வெற்றியாளர்கள்:
முதல் பரிசு: (ரூ. 3000/- + சான்றிதழ்)
இரா. ப்ரீத்தி,
இளங்கலை மூன்றாமாண்டு - இயற்பியல்,
பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி.
இரண்டாம் பரிசு: (ரூ. 2000/- + சான்றிதழ்)
க. முத்து கிருஷ்ணன்,
முதுகலை முதலாமாண்டு - தமிழ்,
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, பசுமலை, மதுரை-04.
மூன்றாம் பரிசு: (ரூ. 1000/- + சான்றிதழ்)
கு. தமிழரசன்,
இளங்கலை இரண்டாமாண்டு - நுண்ணுயிரியல்,
கே.எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு.
ஆறுதல் பரிசுகள்: (ரூ. 1000/- + சான்றிதழ்)
1. செ. ஸ்ரீவித்யா,
இளங்கலை மூன்றாமாண்டு - இயற்பியல்,
சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி, திருச்சி - 02.
2. ஜெ. ஜெயரஞ்சனி,
முதுகலை முதலாமாண்டு - கணிதம்
இ.ஜி.எஸ். பிள்ளை கலை அறிவியல் கல்லூரி, நாகப்பட்டினம்.
3. ஜெ. அருணா,
முதுகலை இரண்டாமாண்டு - தமிழ்
மதுரைக் கல்லூரி, மதுரை - 11.

பரிசளிப்பு விழா புகைப்படங்கள்
0 comments:
Post a Comment