அன்னை ராபியா அறக்கட்டளை

Wednesday, May 2, 2018

அன்னை ராபியா நினைவு கட்டுரைப் போட்டி - 2017

மாணவ, மாணவியர் மத்தியில் வாசிக்கும்  பழக்கத்தை ஏற்படுத்தி, எழுதும் கலையை வளர்த்தெடுத்து, அவர்களின் சிந்தனையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் சென்ற ஆண்டு 'அன்னை ராபியா நினைவு கட்டுரைப் போட்டி'யொன்று அன்னை ராபியா அறக்கட்டளை மூலமாக நடத்தப்பட்டது. முதன் முதலாக நடத்தப்பட்ட அப்போட்டியில் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது ஆக்கங்களைச் சமர்ப்பித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமல்லாமல், போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் அன்னை ராபியா அறக்கட்டளையின் சார்பாக பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். தங்களது பிள்ளைகளை போட்டியில் கலந்து கொள்ளத் தூண்டிய பெற்றோர்களுக்கும் ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

அதன்படி, இந்த வருடமும் மாணவ, மாணவிகளின் கோடை விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில் 'அன்னை ராபியா நினைவு கட்டுரைப் போட்டி-2017' நடத்தப்பட்டது. நிறைய மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தங்களது ஆக்கங்களைச் சமர்ப்பித்தனர். இந்த ஆண்டு போட்டிக்கு சென்னை, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் கட்டுரைகள் வந்தன. போட்டிக்கு வந்த கட்டுரைகளை எழுத்தாளர் சேயன் இப்ராஹீம் பரிசீலித்து வெற்றியாளர்களைத் தேர்வு செய்தார்.

பரிசளிப்பு விழா நடத்தி பரிசுகளை வழங்குவதற்கான பொருளாதாரம் இல்லாத இக்கட்டான சூழ்நிலையின் காரணமாக பரிசுகளும், சான்றிதழ்களும் வெற்றியாளர்களின் வீடுகளுக்கே சென்று நேரடியாக வழங்கப்பட்டன. வெளியூர் போட்டியாளர்களுக்கான பரிசுத் தொகை மணியார்டர் மூலமாகவும், சான்றிதழ்கள் கொரியர் மூலமாகவும் அனுப்பி வைக்கப்பட்டன.

வெற்றியாளர்கள்:


                                                         போட்டிக்கான துண்டுப் பிரசுரம்




Share:

0 comments:

Post a Comment

அன்னை ராபியா அறக்கட்டளை

அன்னை ராபியா  அறக்கட்டளை

ஹிக்மத் அகாடமி

ஹிக்மத் அகாடமி

பார்வையாளர்கள்