புளியங்குடி முன்னாள் மாணவர்கள் சங்கமும், அன்னை ராபியா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய உயர்கல்வி வழிகாட்டி முகாம் புளியங்குடி ஹஸனத்துல் ஜாரியா அரபிப் பாடசாலை வாளகத்தில் 09-05-2018 புதன் கிழமை அன்று நடைபெற்றது.
அப்துல் ரசாக் இறை வசனங்களை ஓத, வழிகாட்டி முகாம் இனிதே தொடங்கியது. மேலப் பள்ளிவாசல் ஜமாத் கமிட்டித் தலைவர் ஹாஜி. எம். முகம்மது இஸ்மாயில் விழாவிற்கு தலைமை தாங்கினார். புளியங்குடி முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் மற்றும் சமுதாயப் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். புளியங்குடி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் பொருளாளர் பாரூக் வரவேற்புரை வழங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் அமீர் கான் விழா தொகுப்புரையையும், ஜாகீர் அப்பாஸ் சிறப்பு விருந்தினர்கள் பற்றிய அறிமுக உரையையும் வழங்கினர்.
தொடர்ந்து நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டி முகாமில் கல்வி, சமூக ஆர்வலர் ஜெ. திவான் முகம்மது அவர்கள் பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள் இடையேயான உறவும், மாணவர்களின் முன்னேற்றமும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். கல்வி ஆலோசகர் அகமது ரியாஸ் மாணவர்களை ஊக்கப்படுத்திப் பேசினார்;. மதுரை வக்பு வாரியக் கல்லூரியின் முதல்வரும், புளியங்குடி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் கௌரவ ஆலோசகருமான முனைவர் அப்துல் காதிர் (எ) சலீம் அவர்கள் உயர்கல்வி, அரசுப் பணிகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து உயர்கல்வி ஆலோசகரும், ஆலிம் முஹம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியருமான முகம்மது ரபீக் சிறப்புரை ஆற்றினார். உரையைத்தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர்களது சந்தேகங்களைப் போக்கினார்.
உயர்கல்வி ஆலோசகர் அப்துல் ரஜாக் மெய்னுதீன் மாணவர்களுக்கு திறனறிவுத் தேர்வு நடத்தி, மாணவர்களின் தனித்திறனைக் கண்டறிந்து கூறினார். புளியங்குடி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் உறுப்பினர் உறுப்பினர் இம்ரான் கான் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது.
பவர்பாய்ண்ட் பிரஸன்டேஷன், திறனறிவுத் தேர்வு என புளியங்குடிக்கு புதுமையான முறையில் நடத்தப்பட்ட இந்த உயர்கல்வி வழிகாட்டி முகாமில் ஏராளமான மாணவ, மாணவியரும், பெற்றோர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். மிகவும் பயனுள்ள வகையில் அமைந்த இம்முகாமில் கலந்து கொண்ட அனைவரும் மிகுந்த பயனடைந்தனர்.

விழா அழைப்பிதழ் & பேனர்கள்
விழா புகைப்படங்கள்
0 comments:
Post a Comment