மாணவ/மாணவியர் மற்றும் இளைஞர்களிடத்தில் அரசுப் பணிகள் குறித்த விழிப்புணர்வை அதிக அளவில் ஏற்படுத்தி, அவர்கள் அரசுப் பணிக்கான தேர்வுகளை எதிர்கொள்வதற்குத் தேவையான பயிற்சியை அளித்து, அரசு பதவிகளில் அமர்த்த வேண்டும் என்பது அன்னை ராபியா அறக்கட்டளையின் மிக முக்கியமான நோக்கமாகும்.
அதன்படி, அன்னை ராபியா அறக்கட்டளை புளியங்குடி MSF மற்றும் AIMS வெல்ஃபேர் டிரஸ்ட் ஆகியவற்றுடன் இணைந்து TNPSC Group-IV மற்றும் VAO பயிற்சியை அளிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டது. தொடர் முயற்சியின் பலனாக புளியங்குடி காயிதே மில்லத் தெருவில் உள்ள நூருல் இஸ்லாம் வாலிபர் சங்க வளாகத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
சுமார் 40 நாட்கள் நடத்தப்பட்ட இப்பயிற்சி வகுப்புகளில் மாணவ/மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். மாதிரித் தேர்வுகள், தொடர் பயிற்சி என தராமான முறையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
முக்கிய தகவல்களை உள்ளடக்கிய பாடப் புத்தகங்கள் பயற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டன.
புளியங்குடி மக்களின் நெடுநாள் ஏக்கம் இப்பயிற்சி வகுப்பின் மூலம் நீங்கியது. அடுத்தடுத்து நடைபெற இருக்கும் அரசுப் பணிக்கான தேர்வுகளுக்கு மாணவ, மாணவியரைத் தயார் செய்யும் பொருட்டு இப்பயிற்சி வகுப்புகளை இன்னும் சிறப்பான முறையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்பிற்கு அழைப்பு விடுத்த படங்கள்
பயிற்சி வகுப்பின் தொடக்க விழாவில் எடுத்த புகைப்படங்கள்
0 comments:
Post a Comment