புளியங்குடியில் இயங்கி வரும் புளியங்குடி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் PAART அறக்கட்டளை நூலகத்திற்கு அன்னை ராபியா அறக்கட்டளையின் சார்பாக போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டது.
புளியங்குடி மாணவ/மாணவியர்களை அதிக அளவில் அரசு வேலைவாய்ப்பிற்கு அனுப்ப வேண்டும் என்பது அன்னை ராபியா அறக்கட்டளையின் நோக்கங்களில் முதன்மையானதாகும். அதே நோக்கத்தோடு செயல்பட்டு வரும் PAART அறக்கட்டளையோடு இணைந்து பணியாற்றும் வகையில் அன்னை ராபியா அறக்கட்டளையின் சார்பாக இந்நூல்கள் வழங்கப்பட்டது.
கணிதம், தமிழ், வரலாறு, வேதியியல், உயிரியல், இயற்பியல், புவியியல், இந்தியப் பொருளாதாரம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளிட்ட தலைப்புகளை உள்ளடக்கிய நூல்கள் வழங்கப்பட்டது. இந்நூல்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ/மாணவியருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.
அன்ளை ராபியா அறக்கட்டளையின் அறங்காவலர்கள் அபுதாஹீர் மற்றும் மைதீன் பாதுஷா ஆகியோர் புத்தகங்களை PAART நிர்வாகிகளிடம் வழங்கிய போது எடுத்த படங்கள்
0 comments:
Post a Comment