வளரும் தலைமுறையினரிடத்தில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி, எழுத்தாற்றலை வளர்த்து, சிந்தனையைப் பெருக்கும் பொருட்டு அன்னை ராபியா அறக்கட்டளையின் சார்பாக ஆண்டுதோறும் கட்டுரைப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் 2019ஆம் ஆண்டும் அன்னை ராபியா நினைவுக் கட்டுரைப் போட்டி நடத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி, மாணவ, மாணவிகளின் கோடை விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில் 'அன்னை ராபியா நினைவுக் கட்டுரைப் போட்டி-2019'க்கான துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப்பட்டு புளியங்குடியில் விநியோகிக்கப்பட்டன. மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது ஆக்கங்களைச் சமர்ப்பித்தனர். போட்டிக்கு வந்த கட்டுரைகளை எழுத்தாளர் சேயன் இப்ராஹீம் பரிசீலித்து வெற்றியாளர்களைத் தேர்வு செய்தார்.
முதல் மூன்று இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்கு பரிசு, புத்தகம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. வழக்கம்போல் இந்த ஆண்டும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஊக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
11-08-2019 அன்று நடைபெற்ற அன்னை ராபியா நினைவு விருதுகள் வழங்கும் விழாவில் கட்டுரைப் போட்டிக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன.
அன்னை ராபியா கட்டுரைப் போட்டி - 2019க்கான துண்டுப் பிரசுரம்:
அன்னை ராபியா கட்டுரைப் போட்டி - 2019ன் வெற்றியாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள்:
விழா புகைப்படங்கள்:
0 comments:
Post a Comment