பொதுத்தேர்வுகளை எழுத இருக்கும் பள்ளி மாணவர்கள் தேர்வுகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டியும், மாணவர்களின் ஆளுமைப் பண்புகளை மேம்படுத்தவும் ஹிக்மத் அகாடமியின் சார்பாக ஆளுமை மேம்பாட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
18-01-2025 அன்று மாலை 5.30 மணி அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வினை மஸ்ஜிதுல் அஃலம் பள்ளி இமாம் அபுபக்கர் ஹசனி இறைவசனங்களை ஓதி தொடங்கி வைத்தார். ஹிக்மத் அகாடமியின் நிர்வாக இயக்குநர் அபுதாஹீர் வரவேற்புரையாற்றி வருகைபுரிந்த சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். அகாடமியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செய்யது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
ஹிக்மத் அகாடமியின் கௌரவ ஆலோசகர் ஹாஜி. சுல்தான் செய்யது இப்ராஹீம், இன்ஜினியர் முகைதீன் அப்துல் காதர் (மக்கா மைதீன்), சமூக ஆர்வலர் லெப்பை முஸ்தபா, மேலத்தெரு நண்பர்கள் குழுவைச் சார்ந்த ஒலியுல்லாஹ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்திப் பேசினர்.
இந்நிகழ்ச்சியில் ஆளுமை மேம்பாட்டு நிபுணர் அப்துல் அஜீஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களிடத்தில் உரையாற்றினார். வாழ்வில் முன்னேறுவதற்கான இலக்கை நிர்ணயித்தல் குறித்தும், அதனை அடைவதற்கான வழிமுறைகள் குறித்தும் சிறப்பான முறையில் விளக்கினார்.
ஹிக்மத் அகாடமியில் பயின்று வரும் மாணவ/மாணவியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். ஹிக்மத் அகாடமி ஏற்பாடு செய்த ஆளுமை மேம்பாட்டு நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்னை ராபியா அறக்கட்டளையின் அறங்காவர் மைதீன் பாதுஷா, ஹிக்மத் அகாடமியின் நூலக ஒருங்கிணைப்பாளர் முஹம்மது முஸ்தபா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியின் அழைப்பிதழ் & புகைப்படங்கள்
0 comments:
Post a Comment