பார்ட் அறக்கட்டளை மற்றும் அன்னை ராபியா அறக்கட்டளை இணைந்து நடத்திய TNPSC Group II A தேர்வு விழிப்புணர்வு முகாம் பார்ட் அரங்கில் 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது. புளியங்குடி மேலப்பள்ளிவாசல் இமாம் ஹாஜி கலிலூர் ரஹ்மான் பைஜி இறைவசனங்களை ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பார்ட் அறக்கட்டளையின் தலைவர் அமீர் கான் தலைமை தாங்கினார். பார்ட் அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர் ஜாகிர் அப்பாஸ் வரவேற்புரை வழங்கினார்.
சிறகு போட்டித் தேர்வு நடுவத்தின் நிறுவனர் மற்றும் தாளாளர் மற்றும் முன்னாள் துணை ஆட்சியர் தக்கலை ஹலீமா, வடகரை கிராம நிர்வாக அதிகாரி ஷாஜகான், குன்னக்குடி கிராம நிர்வாக அதிகாரி முத்துக் குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு அரசுப் பணிகள் குறித்தும், அதன் தேவைகள் குறித்தும் விரிவாகப் பேசினர். அன்னை ராபியா அறக்கட்டளையின் அறங்காவலர் அபுதாஹீர் சிறப்புரையாற்றினர். பார்ட் அறக்கட்டளையின் செயலாளர் ஷேக் காதர் மைதீன் நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
புளியங்குடி சுற்று,வட்டார மாணவ/மாணவியர் மற்றும் அவர்தம் பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டு பயன்அடைந்தனர். இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவசியம் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின் அழைப்பிதழ்
0 comments:
Post a Comment