நிகழ்வு -2
மாணவி அஃப்ரின் இறைவசனங்களை ஓத விழா இனிதே ஆரம்பமாகியது. மீராசா அஹ்லுஸ் சுன்னத் மேலப்பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டியின் தலைவர் அல்ஹாஜ். P.N.M. மௌலல் கௌமி M.E., தலைமை தாங்கினார். ஹிக்மத் அகாடமியின் கௌரவ ஆலோசகர்கள் ஹாஜிமா. S. சுபைதா பானு M.Sc., M.A., M.Ed., (முன்னாள் தலைமை ஆசிரியை - காயிதேமில்லத் மேல்நிலைப் பள்ளி), ஹாஜி. M. சுல்தான் செய்யது இப்ராஹீம் B.Com., மற்றும் ஜனாப். R. அப்துல் காதர் MC,ஜனாப். A. முஹம்மது அலி, ஜனாப். S. இம்ரான் கான் B.Sc., மௌலவி. K. முஹம்மது முகைதீன் பாகவி, ஜனாப். M. காலிதீன், ஜனாப். A. முகைதீன், ஜனாப். M. முஹம்மது உசேன், ஜனாப். A. அகமது முகைதீன், சமூக ஆர்வலர் ஜனாப். S.லெப்பை முஸ்தபா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஹிக்மத் அகாடமயின் நிர்வாக இயக்குநர் ஹாஜி. A. அபுதாஹீர் வரவேற்புரை ஆற்றினார். முதன்மை ஒருங்கிணைப்பாளர் ஜனாப். A. செய்யது M.Com., நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
முன்னதாக ஹிக்மத் அகாடமியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர் M. முஹம்மது சுஹைல் இந்திய சுதந்திர வரலாறு குறித்துப் பேசினார். பேச்சுக்கான குறிப்புகளை தானே தயார் செய்து பேசிய அம்மாணவரை அனைவரும் பாராட்டினர். ஜமாத் தலைவர் அம்மாணவரைப் பாரட்டி சான்றிதழ் வழங்கினார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான சேயன் இப்ராகீம் சிறப்புரை ஆற்றினார். இந்திய சுதந்திர வரலாறு குறித்தும், அதில் நமது சமுதாயத்தின் பங்களிப்பு குறித்தும், மாணவர்கள் இந்திய வரலாற்றிலும், வளர்ச்சியிலும் பங்களிப்பு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாகப் பேசினார். வரலாறு குறித்த அவரது தெளிவான பார்வையும், உரையும் நிச்சயம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஹிக்மத் அகாடமியில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் ஜனாப். M.காதர் முகைதீன் M.Com.,B.Ed., ஜனாபா. S. ரிஸ்வானா பாத்திமா B.Sc., ஹிக்மத் அகாடமியின் நூலக ஒருங்கிணைப்பாளர் S. முஹம்மது முஸ்தபா, அன்னை ராபியா அறக்கட்டளையின் அறங்காவலர் A. மைதீன் பாதுஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
வளரும் தலைமுறையினருக்கு வரலாற்றை எடுத்துச் சொல்ல இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவசியம் என்றும், ஹிம்கத் அகாடமி இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.
-----------------------------------------------------------------------------------
நிகழ்வு-1
ஹிக்மத் அகாடமி தொடக்கவிழா
அன்னை ராபியா அறக்கட்டளையின் ஓர் அங்கமான ஹிக்மத் அகாடமியின் தொடக்க விழா 02-01-2025 வியாழக்கிழமை அன்று ஹிக்மத் அகாடமி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியை மஸ்ஜிதுல் அஃலம் பள்ளி இமாம் அபுபக்கர் ஹசனி இறைவனங்களை ஓதி தொடங்கி வைத்தார். ஹிக்மத் அகாடமியின் நிர்வாக இயக்குநர் ஹாஜி.அபுதாஹீர் வரவேற்புரையாற்றி வருகைபுரிந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்றார். அகாடமியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செய்யது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
புளியங்குடி மேலப்பள்ளிவாசல் ஜமாத் கமிட்டியின் தலைவர் அல்ஹாஜ் மௌலல் கௌமி, ஹிக்மத் அகாடமியின் கௌரவ ஆலோசகர் ஹாஜி. சுல்தான் செய்யது இப்ராகீம், நியூ கிரஸ்ண்ட் பள்ளியின் தலைவர் செய்யது சுலைமான், காயிதே மில்லத் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியையும் ஹிக்மத் அகாடமியின் கௌரவ ஆலோசகருமான ஹாஜிமா. சுபைதா பானு, வெல்டன் பள்ளியின் முதல்வர் ஜன்னத்துல் பிர்தௌஸ், டாக்டர் யூனுஸ்,நகர்மன்ற உறுப்பினர் முகம்மது நயினார், இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) கல்லூரியின் தாளாளர் காஜா மைதீன், ஜமாத் கமிட்டி உறுப்பினர் முஹம்மது முகைதீன் பாகவி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் இ.மை. அப்துல், சமூக ஆர்வலர் லெப்பை முஸ்தபா மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
பெற்றோர்களும்,மாணவர்களும் ஹிக்மத் அகாடமியின் செயல்பாடுகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர். நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்னை ராபியா அறக்கட்டளையின் அறங்காவர் மைதீன் பாதுஷா, ஹிக்மத் அகாடமியின் நூலக ஒருங்கிணைப்பாளர் முஹம்மது முஸ்தபா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியின் புகைப்படங்கள்